மனிதா மனிதா
நிறமாய் பிரிந்தாய்
மதமாய் பிரிந்தாய்
மொழியாய் பிரிந்தாய்
இனமாய் பிரிந்தாய்
எதனால் இணைவாய்
இன்னும் எத்தனை உயிரை எடுப்பாய்
அழித்தாய் ஒழித்தாய்
இறுமாப்பில் இருந்தாய்
உயர்வாய் நிறைவாய்
இருந்த உலகை கெடுத்தாய்
இன்று இயற்கை முன்
துரும்பு நீ எனத் தெளிவாய்
உணர்வாய் உணர்வாய்
மிகச் சிறியவன் நீ என உணர்வாய்
உயிராய் உறவாய்
உலகத்தோடு இணைவாய்
அன்பால் பிணை வாய்
கோரானா எனும் அரக்கனை கொல்வாய்
கோரானா எனும் அரக்கனை கொல்வாய்
No comments:
Post a Comment