ஓயாத சப்தம்
நிழலோடு யுத்தம்
நீங்காது நித்தம்
நினைவுகளின் எச்சம்
நண்பனின் துரோகம்
சொந்தத்தின் வேஷம்
பாசத்தின் மோசம்
விடாத ரோகம்
முடியாத மோகம்
தனியாத தாகம்
தீராத தாபம்
இடைவிடா வேகம்
ஓயாத சப்தம்
நிழலோடு யுத்தம்
நீங்காது நித்தம்
நினைவுகளின் எச்சம்
வேதத்தின் சாரம்
மௌனத்தின் கீதம்
ஓங்கார நாதம்
உணர்ந்தபின் வாழ்வு மாறும்
கோபங்கள் யாவும்
மனம் செய்யும் மாயம்
குரோதங்கள் யாவும்
எண்ணத்தின் ஆக்கம்
நேற்றை மறப்போம்
நாளையை துறப்போம்
உண்மையிலேயே உயிர்போம்
இம்மையிலே இணைவோம்
வேதத்தின் சாரம்
மௌனத்தின் கீதம்
ஓங்கார நாதம்
உணர்ந்தபின் வாழ்வு மாறும்
No comments:
Post a Comment