தமிழில் எழுத வேண்டும் என்பது எனது மனதில் நீண்ட நாட்களாக உள்ள ஆசை. ஆனால் எப்பொழுதும் இருக்கும் சோம்பலும், வீடு மற்றும் ஆபீஸ் வேலைகளுக்கு தரும் முக்கியத்துவமும், எழுத விடாமல் செய்து கொண்டே இருந்தது. மேலும் நான் எழுதி என்ன சாதிக்க போகிறேன் என்ற எண்ணமும் ஒரு காரணம். எனது தமிழ் பற்றிய நம்பிக்கையின்மை இருந்தாலும், ஆயிரக்கணக்கில் இணையதளத்தில் தமிழில் எழுதி வரும் எண்ணற்ற பதிவர்களை பார்க்கும் பொழுது வரும் உற்சாகமே எழுதும் உத்வேகத்தை அளித்துள்ளது.
எனக்கும் தமிழுக்கும் என்ன பரிச்சியம் உள்ளது என்பது நான் சுற்றே சிந்திந்து பார்கிறேன். சிறு வயதில் அம்புலிமாமா பாலமித்ரா கோகுலம் போன்ற புத்தகங்களில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கும். நாளடைவில் ராஜேஷ்குமார் சுபா போன்ற பாக்கெட் நாவல்களும் குமுதம், விகடன் போன்ற வாரந்திர பத்திரிகைகளும் படிக்க துவங்கினேன். தந்தையின் உதவியால் ஜானகிராமன், ஜெயகாந்தன், கல்கி, சுஜாதா என விரிவடைந்தது. வேலை பார்க்க ஆரம்பித்த பின் குறைந்த படிக்கும் பழக்கம், இணையத்தின் உதவியால் மீண்டும் தொடர்கிறது.
எழத்து என்பது படிக்கும் வாசகனை படிக்க வைக்கும் படி இருத்தல் அவசியம் என கருதுபவன் நான். புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டாலும் பல இணைய தளங்களில் படித்து வருகிறேன். ஜெமோ, சாரு, ஞானி அவர்களின் பதிவுகள் சுவாரஸ்யமாக இருப்பவை. தொடர்ச்சியாக தமிழில் எழுத வேண்டும் என்பது ஆசை. நான் படிக்க விரும்பும் வகையில் எனது எழுத்துக்களும் இருக்க முயற்சிப்பேன். நன்றி !

No comments:
Post a Comment