Monday, May 25, 2015

தமிழ் நாட்டில் பிராமணர்கள்!!



தமிழ் நாட்டில் பிராமணர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தபடுகிரார்கள் என்று ஒரு விவாதம் பரபரப்பாக நடக்கிறது. ஒரு ஐயர் குடும்பத்தில் பிறந்த  நான்என்றாவது  சாதிரீதியான தாக்குதலை எதிர்கொண்டேனா என்று எண்ணி பார்கிறேன். நான் வளர்த்தது மதுரையில். முதல் சில வருடங்கள் வசித்தது டிவிஎஸ் நகர் என்னும் ஒரு மாடர்ன் அக்ரஹரம் ஆகும். படித்து டிவிஎஸ் பள்ளி. டிவிஎஸ் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு இடங்களும் ஐயங்கார் மற்றும் ஐயர் ஆட்களை பிரதானமாக கொண்டிருந்தது. மற்ற ஜாதி மக்களுடன் நெருக்கமாக பழகும் சூழ்நிலை எனக்கு ஏற்பட வில்லை. பள்ளியில் பல தரப்பட்ட மக்கள் படித்து வந்தாலும் ஜாதி ரீதியான எந்தத் வேறுபாடும் எவரும் பார்கவில்லை. மாறாக நான் வசித்த இடங்கள் படித்த கல்வி சாலைகள் என எங்கும் பிராமணர்கள் பெருமளவில் இருந்து வந்தனர்.

ஒரு விதத்தில்  பிராமணர்கள் மற்றவர்களுடன்  நெருங்கி பழகாமல் இன்னுமும் ஒதுங்கி மாம்பலம், மயிலாப்பூர், நங்கநல்லூர்  என இருப்பது ஏன் என்றும் யோசித்து பார்க்க வேண்டும்.  நம் நகரங்களில்  பிராமணர்கள் மட்டுமே இப்படி தங்களுக்கு என ஓர் இடத்தில தனியாக  இருக்கிறார்கள்.  செட்டியார், தேவர் என வேறு எந்த சாதியினரும் இப்படி நகரங்களில் இருப்பதாக எனக்கு பட வில்லை. இடஒதுக்கிடு காரணமாக ஒன்றும் மிகபெரிய அநீதி நிகழ்ந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. பல தனியார் துறைகளில் புகுந்தும் பல வெளிநாடுகளில் மிக சவுரியமாக பிராமணர்கள் இருப்பதாகவே எனக்கு படுகிறது.

ஒன்று இரண்டு  இடங்களில் நடக்கும் சில சம்பவங்களால் தலித் மக்களை போலவே தாங்கள்  ஒடுக்கபடுவதாக கூறுவது சரியான ஒப்பீடு என படவில்லை.

No comments:

Post a Comment