Saturday, May 30, 2015

மோடியின் ஓராண்டு ஆட்சி!!

மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகி விட்டது. என்னளவில் மோடி ஆட்சிக்கு வந்ததை இந்தியாவிற்கான விழ்ச்சியாகவே பார்த்தேன். கிட்டத்தட்ட வெறும் 15 விழுக்காடு மக்களே கல்வி அறிவுடன் இருந்தாலும், நம்மிடமிருந்து முஸ்லீம் சகோதரர்கள் பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கி இருந்தாலும் எந்த வித மத ரீதியான காழ்புணர்வும் இன்றி மிக secularana ஒரு அரசியல் சட்டம் நிறுத்தப்பட்டது நமது பாரத தேசத்தில் தான். மோடி மற்றும் அவரது RSS நண்பர்களின் பேச்சு பல விதங்களில் அருவெறுப்பை உண்டாக்கியது. அதே நேரத்தில் மோடியின் தீவிரமான அரசியல் பிரச்சாரம் அவரொரு கடின உழைப்பாளி என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்தியா இந்துக்களுக்கே என்று கூறி, பிறகு இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே என்று அடித்த அந்தர் பெல்டி சிரிப்பை வரவைதாலும் தோற்க போகும் தமிழகத்திற்கு கூட பல முறை வந்து பிரச்சரரம் செய்த உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது.

நான் கடந்த தேர்தலை வெறும் ஊழலுக்கு எதிரான தேர்தலகாவோ  வாரிசு எதிர்ப்புக்கு எதிரான தேர்தலகாவோ பார்கவில்லை. இந்தியா பண்முகதன்மை கொண்ட secular தேசம் என்ற சித்தாந்தத்தை மறுக்கும் ஒரு அணியின் முயற்சியாகவே பார்த்தேன். நமது துரதிஷ்டம் நாட்டில் உள்ள கட்சிகள் மீடியாக்கள் என எவையும் இவை தொடர்பான தர்ர்கரீதியான விவாதங்களை மக்கள் முன் வைக்க வில்லை. உலகவில் பல நாடுகளில்  மதம் என்பது மனிதர்க்கு எந்த அளவில் தேவை, மதத்தின் பங்கு இந்த விஞ்ஞான உலகில் என்ன என  விவாதங்கள் நடைபெறும் பொழுது மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ஒரு கட்சி வந்தது எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.




இவையே நான் பார்த்த நல்லவைகள். 

1. எந்த தலைவருக்கும் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். அந்த விதத்தில் மோடியின் அபார பேச்சாற்றல் அவரது முதல் பாராளுமன்ற பேச்சில் வெளிப்பட்டது. எங்கு சென்றாலும் மிக அருமையாக பேசுகிறார்.

2. அதே போல் தலைவர்கள் கணவுகளை விதைப்பவர்களாக இருக்க வேண்டும். நிச்சயம் 100 ஸ்மார்ட் சிடிஎஸ் சவச் பாரத் போன்ற திட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியது.


3. பல வெளிநாடுகளுக்கு சென்று நல்லுறவை ஏற்படுத்த செய்த முயற்சிகள்.

4. கோவில் கட்டுவதை விட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்வதே தலையாய கடமை என அறிவித்தது .

விரும்பத்தகாதவை

1. எங்கும் எழும்பும் RSS அமைப்புகளின் ஆதிக்கம்.

2. மோடி தவிர மற்ற தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு.

3. பசு மாமிச தடை.  இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக ஆக்கும் முயற்சியே.

4. எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் ஒரு வருடத்தை கடத்தியது. கச்சா எண்ணெய் விலை குறைவால் economy சுற்றேநிமிர்ந்தது.

இந்திய பாகிஸ்தான் பிரச்சனை பிஜேபி  ஆட்சியின் கீழ் ஒரு முடிவிற்கு வர சாத்தியமுண்டு. சண்டை வரவும் சாத்தியமுண்டு! Secularana இந்தியா பாகிஸ்தானுக்கு என்றும் ஒரு அச்சுறத்தல் ஆகும். பிஜேபி மற்றும் பாகிஸ்தானின் மத ரீதியான நிறுவனங்கள் இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.   இந்துக்களுக்கான தேசம் இந்தியா என்றும் முஸ்லிம்களுக்கான தேசம் பாகிஸ்தான் என்றுகூரும் இருவரும் ஒருபட வாய்ப்புண்டு.

வரும் சில வருடங்களில் இன்னும் சரியாக ஒரு முடிவிற்கு வர முடியும். ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனி பிரும்மாண்டமான வளர்ச்சியை பெற்றது. அதே நேரத்தில் மிக பெரிய இன வெறுப்பை ஏற்படுத்தி ஒரு பெரிய நாச சக்தியாக உருவெடுத்தது. அப்படி  இல்லாமல் இந்திய ஒருமைபாட்டிற்கு பங்கம் இல்லாமல் சீரான வளர்ச்சியும், வேற்றுமைகளின் மேல் வெறுப்பில்லாத ஒரு தேசம் ஆக இந்தியாவை தொடர்ந்து இருக்க செய்தால் மோடி நிஜமான மஸ்தஆன்  ஆக கொண்டடபடுவர். இரண்டில் ஒன்றில் மட்டுமே  வெற்றி பெற்றாலும் அவர் அனைவராலும் ஒதுக்கபடுவார்.   


Monday, May 25, 2015

ஓகே கண்மணி



ஓகே கண்மணி படத்தை மிக எதிர்பார்புடன் பார்த்தேன். ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே தோன்றியது. கெளதம் மேனனை போல் தனது படத்தை தானே திரும்பவும் எடுக்க தொடங்கி விட்டாரோ மணிரத்னமும் என்ற எண்ணம் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் தொய்வின்றி படம் செல்கிறது. தனது வித்தியாசமான முயற்சியான கடல் படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இது போதும் உங்களுக்கு என முடிவெடுத்து கல்லா கட்டி விட்டார் மணி. கடல் முற்றிலும் மணியின் படங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. அந்த படம் ஒரு ஜெயமோகன் படம் என்றே தோன்றியது. அந்த படம் வெற்றி அடைந்திருந்தால் மேலும் நல்ல இலக்கிய பங்களிப்பு தமிழ் படங்களில் இருந்திருக்கும். அதன் தோல்வி ஒரு பின்னடைவே ஆகும்.

கதை கிட்ட தட்ட அதே அலைபாயுதே கதை தான். என்ன திருமணம் செய்யாமல் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து வாழ்கிறார்கள். வயதாகியும் மனைவியை காதலுடன் கவனித்து கொள்ளும் பிரகாஷ் ராஜை பார்த்து திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இசை. ரெஹ்மான் எந்த உயரும் சென்றாலும் மணியிற்கு மிக சிறந்த இசையை கொடுத்து வருகிறார். technicalaga கேமரா எடிட்டிங் என அனைத்து departmentuம் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள்.

எல்லோரும் கொண்டாடும் அளவிற்கு படத்தின் காதல் காட்சிகள் பிரமாதமாக எனக்கு படவில்லை. வழக்கமான மேல் தட்டு விளையாட்டு வாலிபன் மற்றும் மேல்தட்டு நாயகியின் மேம்போக்கான குறும்பான காதல் காட்சிகள். தனது ஹோமே கிரௌண்டில் சிக்ஸர் மேல் சிக்ஸர் ஆக மணி காதல் காட்சிகளில் விளாசி இருக்கிறார். தனது டார்கெட் audience யார் என தெளிவான முடிவுடன் படம் எடுத்திருக்கிறார். வெறும் துணுக்கு தோரணமாக படத்தை நகர்த்தி செல்கிறார். பரத்வாஜ் ரெங்கனின் "conversations with mani ratnam" படித்த பொழுது ஒவ்வொரு காட்சிக்கும்  பின்னணியில் எவ்வளவு உழைப்பு தேவைபடுகிறது என்று விவரிப்பார் மணி. இந்த படத்தில் அது தெளிவாக தெரிகிறது. கதாநாயகன் உருவாக்கும் "கேம்", அவனது "ஆபீஸ்" என ஒவ்வொரு காட்சிக்கும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள்.  "Minute attention to details" மணியிடமிருந்து மற்ற "directors"  கற்று கொள்ள வேண்டும்.

தனது கடல் மற்றும் இராவணன் ஆகிய படங்களில் தன சொல்ல நினைத்த இடத்திற்கு படத்தை fastforward செய்தது போல் நேராக கொண்டு சென்றதாகவும் அது மக்கள் மனதில் கதையை சரியாக பதிவு செய்ய வில்லை என்றார். இந்த படத்தில் மணி சொல்ல வந்தது "Live In  \Relation" மற்றும் அதன் complications. ஆனால் வர்த்தகத்துக்காக மணி "compromise" செய்து ஒரு ஜனரஞ்சகமான ஓர் படத்தை எடுத்து வெற்றி பெற்று விட்டார்.

பாசாங்கின்றி  நல்ல  மசாலாக்களை எடுத்த 80's  மணியை மீண்டும் என்றாவது பார்பேன் என்ற ஏக்கத்துடனும் நம்பிக்கையுடனும் விடை பெறுகிறேன்.

தமிழ் நாட்டில் பிராமணர்கள்!!



தமிழ் நாட்டில் பிராமணர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தபடுகிரார்கள் என்று ஒரு விவாதம் பரபரப்பாக நடக்கிறது. ஒரு ஐயர் குடும்பத்தில் பிறந்த  நான்என்றாவது  சாதிரீதியான தாக்குதலை எதிர்கொண்டேனா என்று எண்ணி பார்கிறேன். நான் வளர்த்தது மதுரையில். முதல் சில வருடங்கள் வசித்தது டிவிஎஸ் நகர் என்னும் ஒரு மாடர்ன் அக்ரஹரம் ஆகும். படித்து டிவிஎஸ் பள்ளி. டிவிஎஸ் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு இடங்களும் ஐயங்கார் மற்றும் ஐயர் ஆட்களை பிரதானமாக கொண்டிருந்தது. மற்ற ஜாதி மக்களுடன் நெருக்கமாக பழகும் சூழ்நிலை எனக்கு ஏற்பட வில்லை. பள்ளியில் பல தரப்பட்ட மக்கள் படித்து வந்தாலும் ஜாதி ரீதியான எந்தத் வேறுபாடும் எவரும் பார்கவில்லை. மாறாக நான் வசித்த இடங்கள் படித்த கல்வி சாலைகள் என எங்கும் பிராமணர்கள் பெருமளவில் இருந்து வந்தனர்.

ஒரு விதத்தில்  பிராமணர்கள் மற்றவர்களுடன்  நெருங்கி பழகாமல் இன்னுமும் ஒதுங்கி மாம்பலம், மயிலாப்பூர், நங்கநல்லூர்  என இருப்பது ஏன் என்றும் யோசித்து பார்க்க வேண்டும்.  நம் நகரங்களில்  பிராமணர்கள் மட்டுமே இப்படி தங்களுக்கு என ஓர் இடத்தில தனியாக  இருக்கிறார்கள்.  செட்டியார், தேவர் என வேறு எந்த சாதியினரும் இப்படி நகரங்களில் இருப்பதாக எனக்கு பட வில்லை. இடஒதுக்கிடு காரணமாக ஒன்றும் மிகபெரிய அநீதி நிகழ்ந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. பல தனியார் துறைகளில் புகுந்தும் பல வெளிநாடுகளில் மிக சவுரியமாக பிராமணர்கள் இருப்பதாகவே எனக்கு படுகிறது.

ஒன்று இரண்டு  இடங்களில் நடக்கும் சில சம்பவங்களால் தலித் மக்களை போலவே தாங்கள்  ஒடுக்கபடுவதாக கூறுவது சரியான ஒப்பீடு என படவில்லை.