Monday, May 25, 2015

ஓகே கண்மணி



ஓகே கண்மணி படத்தை மிக எதிர்பார்புடன் பார்த்தேன். ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே தோன்றியது. கெளதம் மேனனை போல் தனது படத்தை தானே திரும்பவும் எடுக்க தொடங்கி விட்டாரோ மணிரத்னமும் என்ற எண்ணம் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் தொய்வின்றி படம் செல்கிறது. தனது வித்தியாசமான முயற்சியான கடல் படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இது போதும் உங்களுக்கு என முடிவெடுத்து கல்லா கட்டி விட்டார் மணி. கடல் முற்றிலும் மணியின் படங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. அந்த படம் ஒரு ஜெயமோகன் படம் என்றே தோன்றியது. அந்த படம் வெற்றி அடைந்திருந்தால் மேலும் நல்ல இலக்கிய பங்களிப்பு தமிழ் படங்களில் இருந்திருக்கும். அதன் தோல்வி ஒரு பின்னடைவே ஆகும்.

கதை கிட்ட தட்ட அதே அலைபாயுதே கதை தான். என்ன திருமணம் செய்யாமல் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து வாழ்கிறார்கள். வயதாகியும் மனைவியை காதலுடன் கவனித்து கொள்ளும் பிரகாஷ் ராஜை பார்த்து திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இசை. ரெஹ்மான் எந்த உயரும் சென்றாலும் மணியிற்கு மிக சிறந்த இசையை கொடுத்து வருகிறார். technicalaga கேமரா எடிட்டிங் என அனைத்து departmentuம் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள்.

எல்லோரும் கொண்டாடும் அளவிற்கு படத்தின் காதல் காட்சிகள் பிரமாதமாக எனக்கு படவில்லை. வழக்கமான மேல் தட்டு விளையாட்டு வாலிபன் மற்றும் மேல்தட்டு நாயகியின் மேம்போக்கான குறும்பான காதல் காட்சிகள். தனது ஹோமே கிரௌண்டில் சிக்ஸர் மேல் சிக்ஸர் ஆக மணி காதல் காட்சிகளில் விளாசி இருக்கிறார். தனது டார்கெட் audience யார் என தெளிவான முடிவுடன் படம் எடுத்திருக்கிறார். வெறும் துணுக்கு தோரணமாக படத்தை நகர்த்தி செல்கிறார். பரத்வாஜ் ரெங்கனின் "conversations with mani ratnam" படித்த பொழுது ஒவ்வொரு காட்சிக்கும்  பின்னணியில் எவ்வளவு உழைப்பு தேவைபடுகிறது என்று விவரிப்பார் மணி. இந்த படத்தில் அது தெளிவாக தெரிகிறது. கதாநாயகன் உருவாக்கும் "கேம்", அவனது "ஆபீஸ்" என ஒவ்வொரு காட்சிக்கும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள்.  "Minute attention to details" மணியிடமிருந்து மற்ற "directors"  கற்று கொள்ள வேண்டும்.

தனது கடல் மற்றும் இராவணன் ஆகிய படங்களில் தன சொல்ல நினைத்த இடத்திற்கு படத்தை fastforward செய்தது போல் நேராக கொண்டு சென்றதாகவும் அது மக்கள் மனதில் கதையை சரியாக பதிவு செய்ய வில்லை என்றார். இந்த படத்தில் மணி சொல்ல வந்தது "Live In  \Relation" மற்றும் அதன் complications. ஆனால் வர்த்தகத்துக்காக மணி "compromise" செய்து ஒரு ஜனரஞ்சகமான ஓர் படத்தை எடுத்து வெற்றி பெற்று விட்டார்.

பாசாங்கின்றி  நல்ல  மசாலாக்களை எடுத்த 80's  மணியை மீண்டும் என்றாவது பார்பேன் என்ற ஏக்கத்துடனும் நம்பிக்கையுடனும் விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment