Friday, July 3, 2020

ஓம்


ஓயாத சப்தம் 
நிழலோடு யுத்தம்
நீங்காது நித்தம்
நினைவுகளின் எச்சம்

நண்பனின் துரோகம்
சொந்தத்தின் வேஷம்
பாசத்தின் மோசம்
விடாத ரோகம்

முடியாத மோகம் 
தனியாத தாகம்
தீராத தாபம்
இடைவிடா வேகம்

ஓயாத சப்தம் 
நிழலோடு யுத்தம்
நீங்காது நித்தம்
நினைவுகளின் எச்சம்

வேதத்தின் சாரம் 
மௌனத்தின் கீதம் 
ஓங்கார நாதம்
உணர்ந்தபின் வாழ்வு மாறும்

கோபங்கள் யாவும் 
மனம் செய்யும் மாயம்
குரோதங்கள் யாவும் 
எண்ணத்தின் ஆக்கம்

நேற்றை மறப்போம்
நாளையை துறப்போம்
உண்மையிலேயே உயிர்போம்
இம்மையிலே இணைவோம்

வேதத்தின் சாரம் 
மௌனத்தின் கீதம் 
ஓங்கார நாதம்
உணர்ந்தபின் வாழ்வு மாறும்

Wednesday, June 17, 2020

நீ இல்லாத நானும்


காதல் இல்லா காமம் 
கோபம் இல்லா வீரம்
தேகம் இல்லா போகம்
துன்பம் இல்லா உலகம்
நீ இல்லாத நானும் 
அடி நீ இல்லாத நானும்

மேகம் இல்லா வானம்
காகம் இல்லா முற்றம்
சூனியம் இல்லா பௌத்தம்
உயர் சீலம் இல்லா வாழ்வும்
நீ இல்லாத நானும் 
அடி நீ இல்லாத நானும்

ஞானம் இல்லா குருவும்
அருள் இல்லா பொலிவும்
கருமை இல்லா இரவும்
அமைதி இல்லா மனமும்
நீ இல்லாத நானும் 
அடி நீ இல்லாத நானும்

இன்னும் ஒரு கவிதை!!
தீவிரமாக இறைவனை வேண்டுவோம்
கோரானா மற்றும் யோகேஷின் கவிதை இல்லா உலகிற்கு!!!

Tuesday, June 16, 2020

மனிதா மனிதா


மனிதா மனிதா 

நிறமாய் பிரிந்தாய் 

மதமாய் பிரிந்தாய் 

மொழியாய் பிரிந்தாய் 

இனமாய் பிரிந்தாய்

எதனால் இணைவாய் 

இன்னும் எத்தனை உயிரை எடுப்பாய்


அழித்தாய் ஒழித்தாய் 

இறுமாப்பில் இருந்தாய்

உயர்வாய் நிறைவாய் 

இருந்த உலகை கெடுத்தாய்

இன்று இயற்கை முன் 

துரும்பு நீ எனத் தெளிவாய்


உணர்வாய் உணர்வாய் 

மிகச் சிறியவன் நீ என உணர்வாய் 

உயிராய் உறவாய் 

உலகத்தோடு இணைவாய்

அன்பால் பிணை வாய்

கோரானா எனும் அரக்கனை கொல்வாய்