நான் எந்த ஹிட்டான மணிரத்னம் படத்தையும் இது வரை தியேட்டரில் பார்த்ததில்லை. செக்க செவந்த வானம் விமர்சனம் படம் நன்றாக இருப்பதாக reviews சொன்னவுடன் அவசர அவசரமாக குழந்தைகளை தூங்க செய்து விட்டு தியேட்டர் சென்றால் Austin முதல் முறையாக அரங்கம் நிறைந்த காட்சி. எனது அதிஷ்டம் கிடைத்த சீட் முதல் சீட்.
விஜய்சேதுபதியின் வாய்ஸ் ஒவேரில் படம் மெதுவாகவே ஆரம்பித்தது . எதிர்பார்த்தது போல் கிழ டான் ஆக மக்கி போன ஒரு ரோலில் பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது மனைவியாக ஜெயசுதா . ஒரு கொலை முயற்சி ஒன்றில் பிரகாஷ் ராஜ் , ஜெயசுதா மாட்டிக்கொள்ள ஒவ்வொரு மகன்களாக அரவிந்த் சுவாமி (வரதன் மிக கோபக்காரன், உள்ளூர் பஞ்சாயத்து), சிம்பு (ஏத்தி செர்பியா ஆயுத கடத்தல் ) , அருண் விஜய் (தியாகு துபாயில் பிசினஸ் ) மற்றும் அரவிந்த் ஸ்வாமியின் நண்பனாக விஜய் சேதுபதி (ரசூல் இன்ஸ்பெக்டர் ) ஆகியோர் மிகக் Clecheகளான காட்சிகளுடன் அறிமுகம். பிரகாஷராஜை கொலை செய்ய முயற்சி செய்தது யார் என்ற கேள்வியுடன் துவங்கும் படம், பிரகாஷ் ராஜே தன்னை கொல்ல தனது மகன்களில் ஒருவர் என்று சொல்லி சாக அதன் பின் மகன்களின் நடுவே வரும் தகராறு மற்றும் சில பல கொலைகள் திருப்பங்கள் மற்றும் ஒரு இறுதி ட்விஸ்டுடன் முடிகிறது. படத்தில் வரும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி மற்றும் டயானா ஆகியோரின் கதாபாத்திரங்கள் பற்றி கதை சுருக்கத்தில் சொல்லாததிற்கு காரணம் அவர்கள் அனைவரும் படத்தில் ஊறுகாய் போன்ற சிறிய கதாபாத்திரங்களாக வருகிகிறாரகள்.படத்தில் அவர்கள் இல்லாமல் எடுதித்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
வழக்கம் போல் technical மேக்கிங்கில் மிரட்டி எடுத்திருக்கிறார் மணிரத்னம். எ.ர். ரஹ்மான் (இசை), சந்தோஷ் சிவன்(
Cinematography) மற்றும் மற்ற டெச்னிஸிங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
அரவிந்த் ஸ்வாமியை தவிர அனைத்து நடிகர்களுக்கும் அவர்களுக்கு மிக இயல்பாக பொருத்தி போகிற ஒரு கதாபாத்திரம். அனைவருக்கும் பெரிதாக நடிக்க தேவையே இல்லை. தன்னால் முடிந்த வரை அரவிந்த் ஸ்வாமி நன்றாக செய்திருந்தாலும் அவரது ரோலை இன்னும் நன்றாக பொருந்தி போகிற ஒருவரை வைத்திருக்கிலாம் என்று தோன்றியது. இதே தவறு தான் ஆயுத எழுத்தில் மாதவனை பார்த்தவுடன் தோன்றியது.
படம் விறு விறு என்று செல்கிறதே தவிர படத்தில் பல லாஜிக் மீறல். படத்தில் பொன்னியின் செல்வனின் இன்ஸ்பிரஷன் இருக்கிறது தெரிகிறது. ஆனால் அந்த கதையில் அரசிற்கு யார் அடுத்த ராஜா என்பதை சுற்றி பின்னப்பட்ட பல சதி வலைகள் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் மகன்களை தவிர இதர சுவாரஸ்யங்கள் இல்லை. இந்த காலத்தில் உயில் என்று ஒன்று இருக்காதா, மகன்கள் எதற்காக எப்படி அடித்து கொள்கிறாரகள் என்பது சரி வர புரிய வில்லை. மருந்திற்கும் போலீஸ் சென்னையில் எங்கும் இல்லை எதுவும் செய்யவில்லை.
அதே போல் மணிரத்னத்தின் சில சமீப படங்களை பார்த்தால் அவர் கதையில் characterகலை முன்பு போல் establish செய்ய முயற்சிப்பதில்லை (ரோஜாவில் ஒரு திருநெல்வேலி முன்கதை, பம்பாய் படத்தில் ஒரு லவ் ஸ்டோரி) . இதற்கு இராவணன் பட சமயத்திலேயே விளக்கம் கொடுத்தார். தான் சொல்ல வேண்டிய மைய்ய கருவிற்கு நேரடியாக செல்வதாகவும் இது போன்ற முன் கதைகள் தனக்கு ஒரு டிஸ்ட்ரக்ஷன்ஸ்.. ஆனால் நமது மரபோ கதை சொல்லிகளின் மரபு. முன் கதைகள் மட்டும் அல்ல முன் ஜென்ம கதைகள் கிளை கதைகள் என்று மஹாபாரதம் ராமாயணம் போன்ற நமது காவியங்களில் கூட பல டிஸ்ட்ரக்ஷன்ஸ் உண்டு. இந்த படம் இவ்வளவு சுருக்கமாக இல்லாமல் இரண்டு மூன்று பாகங்களாக கூட எடுத்திருக்கலாம். சொல்ல படாத கதைகளால் படம் முழுதும் மனதில் ஓட்ட வில்லை படத்தில் வரும் எந்த கேரக்டர் மீதும் ஒரு பிடிப்போ பிரியமோ வருவதில்லை. சில நேரம் பொழுது போகாமல் எதோ இரு நாட்டு அணிகள் மோதும் ஒரு மேட்ச் பார்ப்பது போலவே தோன்றியது.
அதே போல் படத்தில் பாராட்டப்பட வேண்டியி ஒரு விஷயம் முஸ்லீம் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தை மிக இயல்பாக காட்டியது. தசாவதரித்தில் கமலஹாசன் முஸ்லீம் ரோலில் வரும் காலிபியுல்லாஹ் குடும்பத்தை பல குழந்தைகள் (7) இருப்பதாக ஒரு ஸ்டீரியோ டைப் போல் சித்தரிததார் .. இதற்கு பிராயச்சித்தம் போல் ஹீரோ ரோலில் விஸ்வருபம் படம் இரு பாகங்கள் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கும் இந்த பாடத்திற்கும் ஒரு சில similarity உண்டு. அவற்றை நிரம்ப சொன்னால் படம் பார்க்கும் ஆர்வம் பொய் விடும் என்பதால் இரண்டாம் பதிவில் சொல்கிறேன்.
நிச்சயம் கொடுத்த காசிற்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. வலித்த முதுகுடன் ஓரளவு பிடித்த படமாகவே அமைந்தது. படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும். பணம் குவியும். மணி ரத்னத்தின் மிக சிறந்த பத்து படங்களில் ஒன்றாக அமையும் என்றல் நிச்சயம் இல்லை.